தென்னிலங்கையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் நோக்கிப் பயணித்த லங்கம பேருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள்
விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் சேதங்களின் அளவு குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |