வீதியில் வாகனத்திற்கு வழிவிட முற்பட்ட மாணவனுக்கு நேர்ந்த துயரம் - கதறும் பெற்றோர்
Sri Lanka Army
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka
Death
By Sumithiran
கால்வாயில் தவறி வீழ்ந்த மாணவன்
குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் தவறி வீழ்ந்த 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.
வீதியில் சென்ற வாகனத்திற்கு வழிவிட முற்பட்ட போது மாணவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட புத்தகப்பை
கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்கால் அருகே பாடசாலை புத்தகபை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குருநாகல் காவல்துறையினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டான்.
எனினும், மாணவன் உடனடியாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.

