கொழும்பில் பாரிய சமையல் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த மாணவி: தொடரும் விசாரணை
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Dhilak
கொழும்பில் (Colombo) உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி பொசன் போயா தினத்தில் தன்சலுக்காக சமைத்துக் கொண்டிருந்த பாரிய பாத்திரமொன்றில் குறித்த மாணவி விழுந்துள்ளார்.
அதன் போது, பலத்த காயமடைந்த மாணவி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்