மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
புதிய இணைப்பு
திட்வா புயல் தாக்க அனர்த்தங்களினால் ஏற்பட்ட அவசர நிலைமைகளுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் அடையாளம் கண்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கல்வியமைச்சினால் டிஜிட்டல் கற்றல் தளம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் பாடவிதானங்கள் மற்றும் கடந்தகால வினாப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய இலத்திரனியல் கற்றல் தளமான ஈ-கல்விக்கூடத்தினான (E-thaksalawa) அணுகலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறையின் ஊடாக பாடசாலைகளை மூடுதல் மற்றும் வெளிவாரியான நெருக்கடிகள் இன்றி மாணவர்கள் பரீட்சைக்கென தொடர்ச்சியான தயாராகுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
முதலாம் இணைப்பு
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும் போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே தெரிவித்துள்ளார்.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார்.
தளர்வான கொள்கைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தளர்வான கொள்கைகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டமும் 16 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும், மேலும் அதை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் தவணை
பேரிடருக்கு பிறகு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் எனவும், இருப்பினும், மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 147 பாடசாலைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |