மீள ஆரம்பிக்கும் பாடசாலைகள்: அதிபர் ஆசிரியர் உட்பட மாணவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
கல்வி அமைச்சு அறிக்கை
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிராமிய பாடசாலைகள் இயங்கிய விதத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத் சிரமங்கள் இல்லாத பாடசாலைகளை வழமைப் போல் நடத்திச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுள்ளது.
மூன்று தினங்கள் மாத்திரமே பாடசாலைகள்
இந்த பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் இருந்தால், பாடசாலை அதிபர், அவர்களை தனிப்பட்ட விடுமுறை வழங்கி நெகிழ்வான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.
கடந்த வாரத்தில் இயங்காத நகர பிரதேச பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள் மாத்திரமே இயங்க வேண்டும்.
செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலைகளை நடத்த வேண்டும்.
இணையதளம் வழியாக கற்பித்தல்
இந்த பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளை நடத்தும் தினங்கள் தொடர்பான முடிவுகளை அதிபர்கள் எடுக்கலாம்.
மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்களுக்கான இணையத்தளம் வழியாக பாடங்களை நடத்துவது அல்லது வீட்டு பாடங்களை வழங்குவது, வீட்டில் இருந்து கற்றல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தராத ஆசிரியர்களுக்கு இந்த தினங்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதப்படமாட்டாது.
கடந்த 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு வழங்கிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.

