உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை! கைதைத் தடுக்க நீதிமன்ற பாதுகாப்பு கோரும் வருண ஜயசுந்தர
எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்