இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம் : மீறினால் அபராதம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று (26) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை (The National Council for Road Safety) அறிவித்துள்ளது.
இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த 3 மாத கால அவகாசம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது என அந்த சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இருக்கைப்பட்டி அணிவது கட்டாயம்
இதன்படி வாகன சாரதி மற்றும் பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன சாரதி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணி ஆகிய இருவருக்கும் இச்சட்டம் பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் இந்த விதிமுறையை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |