செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நிறைவு
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு இன்று 45 நாட்களுக்கு பிறகு நிறைவடைந்தது.
முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை இணைத்து மொத்த அகழ்வு காலம் 54 நாட்கள் (முதல் கட்டம் – 9 நாட்கள், இரண்டாம் கட்டம் – 45 நாட்கள்) ஆகும்.
இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை
அடுத்த கட்ட அகழ்வு, செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட பட்ஜெட்டும் இடைக்கால நிபுணர் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும்.
தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 1, ஆரம்பத்தில் 11 மீட்டர் நீளமும் அகலமும் கொண்டதாக இருந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது அது விரிவுபடுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு தற்போது 23.40 மீட்டர் நீளமும் 11.20 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
இதுவரை இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கையில் 14 சிக்கலான முறையில் உள்ள குவியல்களாகவும் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன . 72-க்கும் மேற்பட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
