ஜோ பைடனின் வீட்டைத் தொடர்ந்து முன்னாள் உப அதிபரின் வீட்டிலும் இரகசிய ஆவணங்கள் மீட்பு!
Donald Trump
Joe Biden
United States of America
By Pakirathan
அமெரிக்காவின் முன்னாள் உப அதிபரனான மைக் பென்ஸின் வீட்டிலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் உப அதிபராக மைக் பென்ஸ் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அவரது காலத்தில் பேணப்பட்டு வந்த அமெரிக்கா அரசினுடைய முக்கிய ஆவணங்கள் அவரது சட்டத்தரணி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனது வீட்டில் குறித்த இரசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க முன்னாள் உப அதிபர் மைக் பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
முக்கிய இரகசிய ஆவணங்கள்
இதேவேளை அமெரிக்கா அரசின் முக்கிய இரகசிய ஆவணங்கள் சில முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் னுடைய வீடு மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் இல்லம் மற்றும் பிரத்தியேக அலுவலகம் என்பவற்றில் இருந்து அண்மைக் காலங்களில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்