அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Raghav
9 months ago

Raghav
in பாதுகாப்பு
Report
Report this article
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கான மனு ஒன்றை அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த மனு அமைச்சரவையில் இன்று (17) பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட பாதுகாப்பு
இதன்படி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவும் மேற்பார்வையிடவும் குழுவொன்றை நியமிக்க அதிபர் தீர்மானித்துள்ளார்.
அந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
