மன்னிப்பு கேட்ட ஈரான் ஜனாதிபதி : கட்டார் மற்றும் ஐக்கிய அமீரக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்காவின் தாக்குதலுக்கு உதவாத வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம். தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசாஸ்கியன் தெரிவித்திருந்தார்.
அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், ட்ரோன் தாக்குதல் வளைகுடா நாடுகள் மீது நீடித்தன.
இந்த நிலையில் கட்டார் அரசு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கட்டார் உள்துறை அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு கைபேசி மூலம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான உயர் எச்சரிக்கை
அதில் பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான உயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொடர்ந்து பூட்டிய வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தியுள்ளார். இன்று 2-வது நாளாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் "ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு வான் பாதுகாப்பு பதில் கொடுத்து வருகிறது. மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்கவும். மக்கள் எச்சரிக்கை மற்றும் அதிகாரபூர்வ இணைய தளத்தில் உள்ள பதிவுகளை பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |