யாழில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனை செய்த வர்த்தகர்கள்: 28000 ரூபாய் தண்டப்பணம்
யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கானது நேற்று 05 செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குளிர்பான வகை
அதன்போது , காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து இருவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், மற்றைய நபருக்கு எட்டாயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்