தமிழினம் ஒற்றுமைப்படாவிடின் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது: எச்சரிக்கை விடுக்கும் செல்வம் எம்.பி.

Vavuniya Selvam Adaikalanathan Tamil
By Aadhithya Jun 24, 2024 09:03 AM GMT
Report

நாங்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Tamil Eelam Liberation Organization) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் சிறி சபாரத்தினத்தின் சிலையை நேற்று (23) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் மக்களின் விடுதலைக்காக தென்னிலங்கையில் பல சமர்களை செய்து தியாகங்கள் புரிந்து விடுதலைக்காக பாடுபட்ட ஒரு இயக்கமே தமிழீழ விடுதலை இயக்கம். அதன் தலைவருடைய சிலையை இன்று திறந்து வைத்துள்ளோம்.

தமிழரசு கட்சிக்கு பேரிழப்பாக மாறிய மாமனிதர் ரவிராஜின் படுகொலை : தமிழர் தரப்பு ஆதங்கம்

தமிழரசு கட்சிக்கு பேரிழப்பாக மாறிய மாமனிதர் ரவிராஜின் படுகொலை : தமிழர் தரப்பு ஆதங்கம்

துப்பாக்கி சத்தம்

துப்பாக்கி சத்தம் இல்லாத போதும் எமது மக்களின் பூர்வீகத்தை ஒழித்து நிலங்களை அபகரிக்கின்ற திணைக்களங்களை வைத்துக் கொண்டு நிலத்தை பறிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன.

தமிழினம் ஒற்றுமைப்படாவிடின் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது: எச்சரிக்கை விடுக்கும் செல்வம் எம்.பி. | Selvam Adaikkalanathan On Tamil Unity

ஒற்றுமை என்பது இப்போதும் இல்லாமல் இருப்பதை எண்ணுகின்ற போது கவலையாக இருக்கிறது. எங்களது இனத்தை காப்பாற்ற இருக்கின்றோம் என்று கூறுகின்ற தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் எல்லாம் வாய் அளவில் தான் இனத்தின் விடுதலை என்கிறார்களே தவிர, இனத்தின் விடுதலைக்காக ஒற்றுமையாக செயற்பட தயாரில்லை.

மக்கள் விரும்பும் ஒற்றுமையை அவர்கள் செய்ய தயாரில்லை. தலைவர் சிறிசபாரத்தினம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். விடுதலைப் புலிகள் கூட இந்தியாவில் ஒரு அணியாக இணைந்து செயற்பட்டனர். மக்களுக்காக துப்பாக்கி ஏந்தி எவ்வாறு பொது எதிரியை சந்தித்தோமோ அதேபோல் அந்த போராளிகளின் இலட்சியத்தை அடைய வேண்டும்.

கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

விடுதலைப் புலிகள்

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்பட தயாராக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் பலமாக இருக்கின்ற போது எங்களுக்குள் இருந்த வடுக்களை ஒருபக்கம் வைத்து விட்டு எங்களது இனம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக விடுதலை புலிகளோடு கைகோர்த்து செயற்பட்டோம் என்பதை பகிரங்கமாக எல்லா மக்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழினம் ஒற்றுமைப்படாவிடின் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது: எச்சரிக்கை விடுக்கும் செல்வம் எம்.பி. | Selvam Adaikkalanathan On Tamil Unity

ஆகவே நாங்கள் ஒட்டுக்குழுக்கள் இல்லை. தேசியத்தை நேசிப்பவர்கள். நாங்கள் இராணுவத்திற்கு எதிராக முதன் முதல் போராடி இருந்தாம். எங்களது போராளிகளும் மரணித்திருக்கிறார்கள். ஆகவே அன்று முதல் நாம் மக்களின் இலட்சியத்தற்காகவே செயற்படுகின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், ஈ.பி.ஆ.ர்.எல்.எவ் கட்சியினுடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர், தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய ஆரம்பகால போராளிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்: நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன்

யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்: நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025