திடீர் உடல் நலக்குறைவு : அத்வானி மருத்துவமனையில் அனுமதி!
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
96 வயதான பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது உடல்நிலை
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)