ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்
Israel
Lebanon
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தெற்கு லெபனானில் உள்ள மஜ்தால் செல்ம் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதிப்படுத்தியது
"அல்-ஹா ஜவாத்" என்று அழைக்கப்படும் விஸாம் ஹசன் தவில் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தவில் ஹிஸ்பொல்லாவின் உயரடுக்கு ரட்வான் படையில் உள்ள ஒரு பிரிவின் துணைத் தலைவராக இருந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தளபதியின் காரை குறிவைத்து
இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஹிஸ்புல்லாவின் களத் தளபதியின் காரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதுடன் அடையாளம் காணப்படாத மற்றொரு ஹிஸ்புல்லா உறுப்பினர் காயமடைந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்