அதிபர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் சுரேசிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!
அதிபரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசிற்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டின் அதிபரின் ஆலோசகராக மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.
அதிபரின் ஆலோசகர்
வடிவேல் சுரேஷ் தனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஆரம்பித்து, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பாசறையில் வளர்ந்தவர்.
மலையகத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கமான LJW யின் பொதுச் செயலாளராக இருந்து அதிபரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தனது கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.
மேலும் அவருடைய இப்பதவி காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தனது வாழ்த்துக்களை செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |