பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏற்படப்போகும் ஆபத்து
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மூத்த பேராசிரியரும் வழக்கறிஞருமான பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை செப்ரெம்பர் தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
எங்கள் கொள்கை அறிக்கை
"பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது என்பது எங்கள் கொள்கை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள ஒன்று. செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நாங்கள் பாடுபடுவோம்" என்று அவர் கூறினார்.
கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்து விஜித ஹேரத் இவ்வாறு கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
