சீனாவுடனான எதிர்கால மோதலில் அமெரிக்காவுக்கு ஏற்படபோகும் பின்னடைவு
சீனாவுடனான எதிர்கால மோதலில் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதல் திறனைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளும் என வொஷிங்டன் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட 'ஒபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்ட மூன்று முக்கிய ஆயுதங்களின் இருப்பை மீண்டும் நிரப்புவதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மூன்று முக்கிய ஆயுத அமைப்புகளில், எதிரியின் எல்லைக்குள் ஆழமாக உள்ள இலக்குகளைத் தாக்கப் பயன்படும் டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளும், எதிரியால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களிலிருந்து பாதுகாக்கும் THAAD மற்றும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளும் அடங்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு பசிபிக் மோதல்
ஈரான் போரில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் போதுமான வெடிமருந்துகள் உள்ளன.

ஆனால் குறைந்துவிட்ட கையிருப்பு மேற்கு பசிபிக் பகுதியில் ஒரு சாத்தியமான மோதலுக்கு வழிவகுக்கும் பலவீனமான சூழலை உருவாக்கியுள்ளதுதாக இந்த ஆய்வுகள் விளக்கியுள்ளன.
எனவே, அந்த இருப்புகளை மீண்டும் உருவாக்குவதற்குத் தேவைப்படும் நேரம் ஒரு பெரும் கவலையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு செயல்முறையான, உயர்தர வெடிமருந்துகளுக்கான இராணுவச் செலவினங்களை ஊக்குவிக்கும் வகையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான 1.5 ட்ரில்லியன் டொலர் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்ட முன்மொழிவை இந்த அறிக்கை கணக்கில் எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |