ஹவுதி தாக்குதல்: செங்கடலில் பாதையை மாற்றிய எண்ணெய் கப்பல்கள்
யேமனின் ஹவுதி குழுவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, செங்கடலில் பல எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன அல்லது திரும்பிச் சென்றன என்று கப்பல் கண்காணிப்புத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன
பாப் அல்-மண்டாப் நீரிணையைத் தவிர்ப்பதற்காக சில கப்பல்கள் புதன்கிழமை தங்கள் திசையை மாற்றிக்கொண்டன என்றும் அவற்றில் இரண்டு சூயஸ் கால்வாயை நோக்கி வடக்கு திசையில் சென்றதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன
பாதையை மாற்றிய கப்பல்கள்
கடந்த செவ்வாயன்று சின் லாங் யாங் மற்றும் ரோடோஸ் கப்பல்கள் தங்கள் பாதையைத் திருப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. செங்கடலின் தெற்கு நுழைவாயிலை அடைவதற்கு முன்பே இந்தக் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றியதாக கூறப்படுகிறது.

நியூ சாம்பியன், சின் டோங் யாங், நியூ பிரைம் மற்றும் தேஷ் விராட் ஆகிய கப்பல்களும் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன, அதே நேரத்தில் லியு ஜியாங் கோ என்ற வாகனக் கப்பலும் திரும்பிச் சென்றது என அறிக்கைகள் கூறியுள்ளன
இதற்கிடையில், சின் லாங் யாங் மற்றும் காஸ்நியூ லேக் கப்பல்கள் வியாழக்கிழமை மீண்டும் பாப் அல்-மண்டாப் நீரிணையை நோக்கிச் சென்றன. இது, ஹவுதிக்கள் தாங்கள் அறிவித்த கடல் முற்றுகையை நடைமுறைப்படுத்துவர்களா என்பதைச் சோதிக்கும் விதமாக இருக்கலாம் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதி கப்பல்கள் மீது தாக்குதல்
சவுதி எண்ணெய்க் கப்பல்களான என்செலியா மற்றும் லைலாவை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஹவுதிக்கள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை மாலை ஒரு கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் முன்பகுதியில் தீப்பிடித்தது.
ஈரானுடன் இணைந்த இந்தக் குழு, சவுதி அரேபியா மீது கடல்வழி முற்றுகையை விதிப்பதாக திங்களன்று அறிவித்ததுடன், சவுதி துறைமுகங்களில் செயல்படுவதற்கு எதிராக கப்பல் நிறுவனங்களையும் எச்சரித்தது.
அமெரிக்க-ஈரான் மோதல் விரிவடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பாப் அல்-மண்டாப்பில் மேலும் இடையூறுகள் ஏற்படுமோ என்ற கவலைகளை இந்த அச்சுறுத்தல்கள் எழுப்பியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்