சுற்றுலா பயணி மீது பாலியல் தொந்தரவு - இலங்கை பிரஜை ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
காலி - ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதுடைய ஜேர்மனிய சுற்றுலாப் பயணிக்கே பாலியல் தொந்தரவேற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த முறைப்பாட்டில் காலி - இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) காலி நீதவான் முன்னிலையில் முற்படுத்தபட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி