கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் ரீதியில் சிக்கல் -விசேட வைத்தியர் அறிவிப்பு
covid
srilanka
youth
women
By Sumithiran
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாதல் என்பன ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி