அநுர அரசாங்கத்திடம் சாணக்கியன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களின் உண்மைத் தன்மையை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் (Joseph Pararajasingham) 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (25) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே சாணக்கியன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கோட்டபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சிக்காலத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை வைக்கவில்லை.
இவருடைய கொலை சம்மந்தமாக சிறையில் இருந்த பிள்ளையான் (Pillaiyan) கோட்டாபயவின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் கொலை குறித்து ஆராய்வதாக அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கம் குறிப்பிட்ட போதும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை குறித்து கருத்தில் கொள்ளவில்லை.
எனவே இலங்கையின் சட்டத்துறை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும்.“ என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க .......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |