சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர உடன் நடவடிக்கை: டக்ளஸ் உறுதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
அதன்போது சாந்தனின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30)சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
அத்தோடு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உறுதி மொழி
இந்நிலையில், தாயார் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் நடிவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
அதேவேளை, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி புலிச் சின்னம் அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |