மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
Batticaloa
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
மட்டக்களப்பு(Batticaloa) - ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறைனர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் நேற்றிரவு(12.12.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வடமுனை ஊத்துச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் இவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடவியல் பிரிவு காவல்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்