அநுராதபுரத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.09.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
மேலும் உயிரிழந்தவர் அநுராதபுரம், யாய 05 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபருக்கும் வேறு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவர் கோடாரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!