ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சற்றுலாப்பயணிகள்: வெளியான தகவல்
2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 3.3 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 191,704 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இது கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.3 சதவீதம் குறைவாகும்.
இந்திய சுற்றுலா பயணிகளே அதிகம்
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து வருகை தந்தோர் 47,253 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரித்தானியாவிலிருந்து 19,588 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 12,321 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 11,405 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,535,122 ஆகப் பதிவாகியுள்ளது.
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17