இலங்கை - இந்தியாவுக்கான கப்பல் சேவை ஏற்பாடுகள்: வெளியான காணொளி
இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதற்கான பணிகள் அதி தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இப்பயணத்துக்கான குடிவரவு முனையம் உள்ளிட்ட நிலையங்களை அமைக்க இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்ற காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுவாகவே தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பு வர்த்தகர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவு வியாபாரம் செய்து வருகின்றனர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட தமிழக வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
பயணிகள் கப்பல் சேவை
இதன் காரணமாக, வர்த்தகர்கள் நலன் கருதியும் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்கள் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து காரைக்கால் துறைமுகத்தை வந்தடைய சுமார் 3.30 மணிநேரமாகும்.
ஒரே நேரத்தில் 300 பயணிகளை அழைத்துவரக் கூடிய கப்பல்களை இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒரு பயணி சுமார் 100 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை எடுத்துச் செல்லவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர ஏற்பாடுகள் காணொளி
