அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: 22 வயதுடைய இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு
கம்பஹா, கெஹல்பத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அழகு கலை நிலையமொன்றில் இருந்த போது அங்கு வந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு 21 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 20 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்