கொழும்பில் நீதிமன்றத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்
கொழும்பு (Colombo) - மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாளிகாகந்த பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேசிய வைத்தியசாலையில் அனுமதி
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (National Hospital of Sri Lanka) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கந்தானை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது நேற்று (13) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கந்தானையைச் சேர்ந்த ரஞ்சி என அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவரின் வீட்டை குறிவைத்து இந்த ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |