கேளிக்கைவிடுதியில் சரமாரி துப்பாக்கிசூடு - எண்மர் உயிர் பிரிந்தது

Shooting Mexico Death
By Sumithiran Jan 31, 2023 12:55 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

மெக்சிகோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரெஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. 'எல் வெனாடிடோ' என்ற பெயரில் இயங்கும் இந்த கேளிக்கை விடுதி உள்ளூர் மக்களிடம் மிகவும் பிரபலமானதாகும். தினந்தோறும் இரவு இந்த கேளிக்கை விடுதியில் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

கேளிக்கை விடுதியில் திரண்ட பலர்

கேளிக்கைவிடுதியில் சரமாரி துப்பாக்கிசூடு - எண்மர் உயிர் பிரிந்தது | Shooting Nightclub In Mexico

அந்த வகையில் சம்பவத்தன்று இரவிலும் கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது இனந்தெரியாத நபர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

கேளிக்கை விடுதியின் ஊழியர்கள், இசை மற்றும் நடன கலைஞர்கள் மற்றும் வாடிக்கையாளர் என அனைவரும் அலறி துடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த இனந்தெரியாத நபர்கள் கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தனர். இதில் பெண்கள் உள்பட 13 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து இரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

விரைந்து வந்த காவல்துறை

கேளிக்கைவிடுதியில் சரமாரி துப்பாக்கிசூடு - எண்மர் உயிர் பிரிந்தது | Shooting Nightclub In Mexico

இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இனந்தெரியாத கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதற்கிடையில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்த தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, படுகாயமடைந்த மற்ற 7 பேரையும் காவல்துறையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018