காவல்துறையினரின் சமிக்ஞையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
காவல்துறை சமிக்ஞையை மீறி பயனித்த மணல் ஏற்றிய வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி - தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்றிரவு(7) சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறு பயணித்த வாகனம் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் மணல் ஏற்றிய வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து இரவு 9.30 மணியளவில் காவல்துறையினர் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம்
இதன்போது வாகனம் சமிக்ஞையை மீறி சென்ற நிலையில் காவல்துறையினர் அதனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தின் சில்லு சேதமடைந்ததால், சாரதி அந்த இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.
மேலும், மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட காவல்துறையினர் சாரதியை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
