அன்டிஜன் கருவிகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் அன்டிஜன் பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்கள் மாத்திரமே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்தார்.
சுமார் 60,000 அன்டிஜன் பரிசோதனை தொகுதிகள் தற்போது எஞ்சியுள்ளதாக கூறினார். இன்று பிற்பகல் வேளையில் மேலும் ஒரு இலட்சம் பரிசோதனை தொகுதிகள் கிடைக்கவேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான 20 தொடக்கம் 30 சிறுவர்கள் பதிவாவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
