பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது PTA ஐ நீக்கு! PSTA சட்ட வரைவை மீள பெறுக,ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்,நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், மனித மாண்பு பேணப்பட வேண்டும்,உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக எமது குரலை வலுப்படுத்துவோம்,'மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்' உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



செய்தி - நயன்
பருத்தித்துறை நகர சபை
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சடடத்தையும் கொண்டுவர வேண்டாம் என்றும் இன்று பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
இதனம்போது தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் அவர்களால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானம் 12 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 2 பேரும் குருத்த தீர்மானத்திலிருந்து விலகியிருந்தனார்.
மொத்தம் 15 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இதேவேளை இன்றைய அமர்வில் முதலவதாக சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்ட்டு அதனை திருத்தங்களுடன் சபை அங்கீகரித்தது.


செய்தி - எரிமலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |