செம்மணிக்கு நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கிழக்கில் ஆரம்பம்
சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பில் (Batticaloa) ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (04) இந்த போராட்டத்த ஆரம்பித்து வைத்தனர்.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
இந்த கையெழுத்து போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், பாக்கியசோதி அரியநேத்திரன், முருகேசு சந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வர் சரவணபவன் உட்பட தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வமாக கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


