இலங்கைத் தமிழர்கள் மீது தனிப்பாசம் உண்டு – பாடகர் ஸ்ரீநிவாஸ்

By Independent Writer Jan 07, 2022 01:33 PM GMT
Report

இலங்கைத் தமிழர்கள் மீது எனக்குத் தனிப் பாசம் உண்டு என்று பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

ஷியாமளாங்கனின் ‘அன்பே’ பாடல் வெளியீடு தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடியவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் முக நூலில் கடந்த வாரம் வெளியிட்ட பதிவில் ‘நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குத் தந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள், அவர்கள் மீது எனக்குத் தனிப்பிரியம் உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலின் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசியர் இருவருமே இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஷியாமளாங்கன் இசையில் பாடிய ‘அன்பே’ பாடல் இந்த மாதம் யூடியூபில் வெளியாகியுள்ளதை முன்னிட்டு முக நூலில் எழுதிய பதிவிலேயே ஸ்ரீநிவாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே முதலான முன்னணி இசைக்கலைஞர்களோடு இணைந்து வெற்றிப் படைப்புகள் பலவற்றைத் தந்தவர் ஷியாமளாங்கன்.

தற்போது வெளிவந்திருக்கும் ‘அன்பே’ பாடலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இலங்கையின் மிகப் பிரபலமான பாடல்களான ‘கிரி கோடு ஹிதட’, ‘பது பெம் பதும்’ முதலானவற்றுக்கு இசையமைத்தவர் ஷியாமளாங்கன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது தமிழகத்தில் வெளியாகும் படங்களுக்கும் வெப்தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

‘இசை நுட்பங்களை அறிந்த திறமை மிக்க இசையமைப்பாளரான ஷியாமளாங்கனோடு இந்த அழகிய பாடலில் பணி புரிந்ததையிட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ஸ்ரீநிவாஸ் தெரிவித்திருக்கிறார்.

‘காதலின் எல்லாப் பரிமாணங்களையும் உணர்த்தும் உயிர்ப்புள்ள வரிகளை மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார்’ என்று பாடலாசிரியரையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ். சந்தம் தப்பாமல் இசையோடு இழையோடும் வரிகளைப் பாவலர் மதுரன் தமிழவேள் (தவ சஜீதரன்) எழுதியிருக்கிறார். ‘தரைமீது இருகால்கள் பதியாமல் அலைகின்றேன் – புவியீர்ப்பின் கணிதங்கள் பிழையானதே’ என்ற மதுரன் தமிழவேளின் வரி இணையத்தில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.




GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019