தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம்
தமிழ் மக்களுடைய நில அதிகாரங்களை பிய்த்து எறிவதற்காக பல சூட்ச்சுமங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தினுடைய கடல் கரை பிரதேசமாக இருக்கின்ற காரைநகர் தொடக்கம் பொன்னாலை வரையான பகுதிகளில் கண்டல் தாவரங்கள் 2010 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு நாட்டப்பட்டது.
கண்டல் தாவரங்கள்
குறிப்பாக கடலரிப்பை தடுப்பதற்காகவும் மீன்வள உற்பத்தியை தடுப்பதற்காகவும் கடல் வளம் பேணுவதற்காக இந்த கண்டல் தாவரங்கள் காரை நகர் , வேலணை, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு உட்பட்ட காரைநகர் முதல் பொன்னாலை வரையான பகுதிகளில் நாட்டப்பட்டது.
இது அந்த மீனவர்களது கடல் வள பாதுகாப்புக்காக நாட்டப்பட்டது. ஆனால் இப்போது 10 ஆண்டுகள் களித்து வன வளத்தினக்களம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலச்சந்திரனுக்கு ஊடாக கிட்டத்தட்ட 380 இற்கு மேற்பட்ட காணிகளை வனவளத்திணைக்களத்துக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், எவ்வாறு மிக நூதனமான முறையில் மிகவும் நுட்பமாக தமிழ் மக்களினுடைய காணிகளை பறிப்பதற்கு மகாவலி அதிகாரசபையை பயன்படுத்தினார்களோ அதே போல இந்த வன வளத்திணைக்களத்தினூடாக வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருக்கிற காணிகளை பறிப்பதற்கு மிக நுட்பமாக சூட்ச்சுமமாக இந்த காரியத்தை வன வளத்திணைக்களம் செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களினுடைய நிலங்கள்
மேலும், இதிலே இருந்தவாறு நான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலச்சந்திரனோடு பேசியிருந்தேன். அப்பொழுது தங்களுக்கு வன வளத்திணைக்களத்தால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தான் மக்களினுடைய கருத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காரைநகர், வேலணை, சண்டிலிப்பாய், போன்ற பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த அரசாங்கம் எதோ ஒரு வகையில் தமிழர்களினுடைய நிலங்களை அவர்களுக்கான அதிகாரம் 1989 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் வெளி வந்த பிற்பாடு இருந்த அதிகாரங்களை புடுங்க கூடிய வகையில் அதனை இல்லாமல் செய்யக்கூடிய வகையில் இந்த நில அதிகாரங்களை பிய்த்து எறிவதற்காக பல பல சூட்ச்சுமங்களை அவர்கள் செய்துவருகிறார்கள்.
அதிலே ஒன்று தான் இப்பொழுது இந்த வன வளத்திணைக்களம் தன்னுடைய காணி என்று கோருவதற்கான முஸ்தீபுகளை கொண்டிருக்கிறது இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |