அரச உத்தியோத்தர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்!
Trincomalee
Sri Lanka
By pavan
திருகோணமலை சமுத்திராகம் கரையோர வலயத்தில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில் ஆய்வு செய்ய சென்ற கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகஸ்தர் ஊர்மிலா கிருபாகரன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பாதிப்புக்குள்ளான அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
கரையோர வலயத்தில் பெரும்பான்மை இனத்தவர்களினால் 34 ற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நடவடிக்கை எடுக்காத காவல்துறை
தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி