மாணவர்களை ஆட்கொள்ளும் ஐஸ் போதை - பாதிக்கப்பட்ட மாணவியின் பதறவைக்கும் வாக்குமூலம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Kiruththikan Dec 15, 2022 02:57 AM GMT
Report

ஐஸ்

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்குமாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷாக்ய நானாயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்களின் உடல் மாற்றங்கள் 

மாணவர்களை ஆட்கொள்ளும் ஐஸ் போதை - பாதிக்கப்பட்ட மாணவியின் பதறவைக்கும் வாக்குமூலம் | Sinister Act Takes Place Secretly School Children

மேலும், மாணவர்களின் உடல் மாற்றங்கள் தொடர்பில் பெற்றோர் தினமும் அவதானிக்க வேண்டும். போதைப்பொருள் பாவனையினால் மாணவர்களின் உடலில் உடனே மாற்றங்கள் ஏற்படாது. சிறிது காலம் செல்லும் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இரும்பு,தகரங்களை சேர்த்துக்கொண்டு நகரிற்குள் வரும் வாகனங்களில் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய மாணவிகள், ஐஸ் போதைப்பொருள் பாவனையினால் தங்களுக்கு நேர்ந்த மாற்றங்களையும்,தாம் ஐஸ் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் விதம் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவியின் வாக்குமூலம்

மாணவர்களை ஆட்கொள்ளும் ஐஸ் போதை - பாதிக்கப்பட்ட மாணவியின் பதறவைக்கும் வாக்குமூலம் | Sinister Act Takes Place Secretly School Children

நிகழ்வொன்றிற்கு சென்ற போது எனது நண்பர்கள் என்னை போதைப்பொருளை பாவிக்குமாறு தெரிவித்தனர்.பின்னர் நான் அதனை செய்து பார்த்தேன்.எனக்கு தனி உலகமாக தெரிந்தது.

பின்னர் தொடர்ந்தும் பாவித்தேன். நாங்கள் பாடசாலைக்கு செல்லும் போதும், முடிந்து வெளியே வந்தவுடனும் பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தினமும் கொண்டு வந்து தருவார்கள்.

இதனை எங்களால் நிறுத்த முடியவில்லை. இந்த சமூகத்தில் நிறுத்த நினைத்தாலும் கடினம். இந்த பழக்கத்தினால் கல்வி கற்க முடியவில்லை.பசி, தூக்கம்,எதுவுமில்லை.

சில காலம் சென்றதும் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுகின்றது.எதுவுமே செய்ய முடியவில்லை.வேலை,படிப்பு எதுவுமே ஞாபகத்தில் இல்லை.

14 வயதிற்கும் மேற்பட்டவர்களே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இந்த பழக்கம் இந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என நாங்கள் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் அடிமைத்தனம்

மாணவர்களை ஆட்கொள்ளும் ஐஸ் போதை - பாதிக்கப்பட்ட மாணவியின் பதறவைக்கும் வாக்குமூலம் | Sinister Act Takes Place Secretly School Children

போதைப்பொருள் பாவனை உலகில் மனித சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன், இது மனித ஆரோக்கியத்திற்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் பக்கவாதம் அல்லது மாரடைப்பு மற்றும் இதயம் நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ் மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, நபர் எதிர்பார்ப்பதை விடவும் அதிகமாக, உடல் அரிப்பு, வறண்ட வாய், அதிக வியர்வை, விரைவான இதயத் துடிப்பு மற்றும் விரைவான சுவாசம் மற்றும் பசியின்மை ஏற்படலாம்.பக்கவாதம் அல்லது மாரடைப்புக்குள்ளாகலாம், மயக்கமடைந்து அல்லது இறக்கலாம் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உள ரீதியான மாற்றத்தின் ஊடாகவே ஹெரோயின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக குணமடைய முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015