நெதன்யாகுவை குறி வைத்த ஹிஸ்புல்லா: அதிர்ச்சியில் பிரித்தானிய பிரதமர்
இஸ்ரேலிய பிரதமரின் வீட்டின் மீது தாக்குதல் என்ற செய்தியானது, தனக்கு அதிர்ச்சியளித்தாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சனிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் (Benjamin Netanyahu) பேசிய போது இதனை கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அதன் போது, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணம் காசாவில் சண்டையை நிறுத்துவதற்கும் பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கும் ஒரு வாய்ப்பு என்றும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தீர்வு
இதேவேளை, சின்வார் ஒரு மிருகத்தனமான பயங்கரவாதி என்றும் அவர் இல்லாத உலகம் சிறந்த இடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான சண்டை தொடர்பாக அரசியல் தீர்வில் முன்னேற்றம் காண்பதன் முக்கியத்துவம்குறித்து இரு பிரதமர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |