இனப்படுகொலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி
பல்வேறு விடுதலை இயக்கங்கள் ஆயுதங்கள் ஏந்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையே நீண்ட விடுதலைப்போராட்டத்தை கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் தமிழரசுக்கட்சியின் இராமநாதபுரம் வட்டாரத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் வட்டக்கச்சி வட்டாரத்தின் ஏற்பாட்டில் ஆறுமுகம் வீதி சந்தியிலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் ஈழத்தமிழ் தேசிய இனம் இந்த மண்ணிலே நீண்டகாலம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டோம் 1954 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர் மீதான பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றன.
நாட்டின் பல பகுதிகளில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது எல்லாம் தர்மத்தின் வழி நாங்கள் ஒரு தீர்வை எட்டிக்கொள்ளலாம் என எமது தலைவர்கள் கருதிய காலத்தில் எங்களைப் பாதுகாக்க ஆயுதங்களுக்கு பதில் வேறொண்டும் இல்லை நிலையிலே ஆயுதங்களை ஏந்தினோம்.
பல்வேறு விடுதலை இயக்கங்கள் ஆயுதங்கள் ஏந்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையே நீண்ட விடுதலைப்போராட்டத்தை கொண்டது.
இந்த காலத்தில் பல படுகொலைகள் இடம்பெற்று முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு வந்தது
பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், பல இலட்சம் மக்கள் இருந்த போது 70000 மக்கள் தான் உள்ளார்கள் என தெரிவித்து உணவளித்து ஏனையோரை பட்டினியால் கொண்டனர்.
அதனை விட கொத்தணி குண்டுகளால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இவை நடந்து 16 வருடம் ஆகியிருந்தாலும் சிரட்டையில் கஞ்சி என்பது உணவுக்காக மக்கள் கஷ்டப்பட்ட காலத்தில் பெரிதும் உதவியது.
அந்த கஞ்சி குடித்த சிறுவர்களையே கொன்றது, இலங்கை அரசு சிரட்டை கஞ்சி என்பது எங்களோடு வாழ்ந்தவர்களின் ஆத்மாவாக நினைக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
