இலங்கையில் ஜனநாயக பின்னடைவு - மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு
இளைஞர்கள் அதிகாரத்திற்கு வர முடியாத சூழல்
இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கிடையில் ஜனநாயகம் இல்லாததால் இளைஞர்கள் அதிகாரத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அளவிற்கு அதிகமான அதிகாரங்களை அனுபவித்து வருவதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம் இல்லை எனவும், அரசியல் கட்சிகள் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறார்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தில் பின்னடைவு
அரச ஊழியர்கள் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் தெரிவித்திருந்த போதும், அரசியல்வாதிகளுக்கு அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்த படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் குறித்து பல கருத்துக்களை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும் இன்றும் பெண்களை கட்சியில் இணைத்து கொள்வதில் பின்னடைவு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
