சிவாஜிலிங்கத்தின் தவிசாளர் பதவி குறித்து உள்ளூராட்சி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவு
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவி மற்றும் அவரது அதிகாரங்களை அடுத்தகட்டமாக எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான முக்கிய தெளிவுபடுத்தல் உத்தரவு ஒன்றை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிறப்பித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, நகரசபையின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் இந்த விபரம் வெளியாகியுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
தெளிவுபடுத்தல் கோரிக்கை
நகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 19(6)-இன் படி, தவிசாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாகவோ அல்லது தவிர்க்க முடியாத வேறு காரணங்களினாலோ தனது கடமைகளை ஆற்ற சமூகமளிக்க முடியாத பட்சத்தில், துணைத் தவிசாளர் தவிசாளரைப் போன்றே அதே அதிகாரங்களைப் பிரயோகிக்கவும், அவரது கடமைகளை முன்னெடுக்கவும் முழுமையான சட்டபூர்வ அதிகாரம் பெற்றுள்ளார் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையினால் கோரப்பட்ட தெளிவுபடுத்தல் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் தவிசாளர் இல்லாத பட்சத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிர்வாக நடைமுறைகளும் இந்த சட்ட ஏற்பாட்டிற்கு அமைவாகவே முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் பிரதிகள் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |