உலக திரையரங்குகளில் வெளிவரப்போகும் கிராமப்புற தமிழனின் வரலாறு
தமிழகத்தை சேர்ந்த பிரபல துடுப்பாட்ட வீரரான நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே நடராஜன் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கிராமப்புறங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னை போல் பல இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை.
சிவகார்த்திகேயன்

என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
அதோடு நான் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவேன்.
பல்வேறு சோதனைகளுக்குப் பிறகுதான் நான் இந்திய அணியில் இடம்பிடித்தேன்.
வாழ்க்கை வரலாறு திரைப்படம்

இந்த ஐ.பி.எல் துடுப்பாட்ட போட்டியில் நன்றாக விளையாடுவேன். மீண்டும் எனது திறமையை காண்பிப்பேன்
மேலும் என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார்.
நான் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த படம் உருவாகலாம். நிச்சயமாக அவர்தான் நடிப்பார் அவரே இந்த படத்தை தயாரிக்கவும் இருக்கிறார்.” என தெரிவித்திருந்தார்