அம்பாறையில் கொடூரமாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : ஆறு பேர் கைது
அம்பாறையில் (Ampara) சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சல உபேந்திர எனும் 50 வயது உடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தின் சூத்திரதாரிகள்
இதையடுத்து, குறித்த ஊடகவியலாளர் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, அண்மையில் கிளிநொச்சியில் ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் என்பவர் மீதும் கடுமையான தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த தாக்குதலை கண்டித்து, யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |