யாழில் சடலத்தை கொண்டு சென்றவர்களை மோதித் தள்ளிய வாகனம் - ஒருவர் பலி பலர் படுகாயம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி - பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த வாகனம் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (21.2.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் குறித்து தெரியவருகையில், கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகனத்தை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
You May like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
