கணேமுல்ல சஞ்சீவவின் இறுதி நொடியில் துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல்!!
பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கமாண்டோ சலிந்த என்ற நபரை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அது குறித்த வட்ஸ்அப் குறுஞ்செய்திகளையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
குறுஞ்செய்திகள்
அதில் முதல் குறுஞ்செய்தியில் கமாண்டோ சலிந்த, “நீ வேலையை செய், வெளியில் எல்லாம் தயாராக உள்ளது, பயப்படாமல் இதை செய்து முடி” என துப்பாக்கிதாரிக்கு தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, “உள்ளே எல்லாம் சரியாக உள்ளதா?, நான் உள்ளே இருக்கிறேன்” என துப்பாக்கிதாரி சலிந்தவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள சலிந்த “சரியாக உள்ளது, தாக்கு, சரியான நேரத்தில் தாக்கு, எல்லாம் சரியாக உள்ளது” என கூறியுள்ளார்.
பின்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "காவல்துறையினர்..?" என்று கேட்க, “எல்லாம் சரி முடித்து விடு” என சலிந்த தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்பு
அதன் பிறகு, காலை 9.54 மணிக்கு கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் துப்பாக்கிதாரி, கமாண்டோ சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை இருவரும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதுடன், “நான் இங்கே வந்து விட்டேன், தங்கை அங்கேயே இருக்கிறாள்” என துப்பாக்கிதாரி கமாண்டோ சலிந்தவுக்கு கூறியுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
