ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: பல்டியடிக்கும் சஜித்தரப்பு
“பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை.” என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்தார்.
சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம்
“ஞானசார தேரருக்கு ஆதரவில்லாத சிங்கள மக்கள்கூட அவரின் துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து அதிருப்தியில் உள்ளனர். துறவற ஆடை என்பது மதத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

இவ்விவகாரம் பற்றியே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கதைத்து வருகின்றார். மாறாக பொது மன்னிப்பு வழங்குமாறு அவர் கோரவில்லை.கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலும் இது பற்றி அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் இனவாதம் இன்னும் ஒழியவில்லை
அதேவேளை, இனவாத சக்திகள் காத்துக்கொண்டிருந்தன. அந்த சக்திகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரசாங்கம் துருப்பொன்றை வழங்கிவிட்டது. இந்நாட்டில் இனவாதம் இன்னும் ஒழியவில்லை. அது ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறான விடயங்களில் வெளிக்கிளம்பும்.”- என்றார் .

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |