துப்பாக்கியுடன் சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
SJB
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Law and Order
By Dhilak
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அம்பலங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் அமித சதுரங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று(12) முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சந்தேகநபரிடம் இருந்து உரிமம் இல்லாத ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று(11) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்