ஜோன்ஸ்டனின் கோட்டையை கைப்பற்றிய சஜித்
Kurunegala
SJB
Johnston Fernando
By Sumithiran
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கோட்டையாக இருந்த குருநாகல் மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கைப்பற்றியுள்ளது.
கடந்த வாரம் (02) சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்மொழிந்த சபையின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக தோற்கடித்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாநகர சபையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
கடமைகளை பொறுப்பேற்பு
குருநாகல் மேயராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சுமேதா அருணாசாந்த நான்கு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
குருநாகல் மாநகர சபையின் புதிய மேயர் பிரதேசத்தின் மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றதன் பின்னர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி