அடுத்த வாரம் தீர்க்கமானதாக அமையும் - சஜித் ஆருடம்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது, தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும், எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஊர்வலத்தின் 5 ஆவது நாளான இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய திட்டங்களையே எதிர்க்கட்சி செயற்படுத்தும் என்றார்.
ராஜபக்ச அரசாங்கத்தை அகற்றுவதற்காகவே நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் இடைக்கால அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதை ஆதரிக்காது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது போன்ற சூதாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பங்கேற்காது என சஜித் பிரேமதாச உறுதியாக தெரிவித்துள்ளார்.
